ADDED : செப் 12, 2025 03:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை பாரதி மன்றம் சார்பில் பாரதியார் விழா ஓட்டல் ஜெயராமில் நடந்தது.
விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். மயிலம் 20ம் பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் கலந்து கொண்டு, பாரதி மன்றம் சார்பில் நல்லி குப்புசாமி, கண் டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு பாரதி விருது வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, பாரதி தொகுப்பில் நல்லி குப்புசாமியை பாராட்டி, 100 கவிஞர்கள் எழுதியுள்ள 'நாடு போற்றும் மாண்பாளர் நல்லி குப்பசாமி' என்ற நுால் வெளியிடப்பட்டது.
நல்லி குப்புசாமி, வனஜா வைத்தியநாதன் ஏற்புரை வழங்கினர். முனைவர் விசாலாட்சி வரவேற்றார். ஜெயந்தி ராஜவேலு தொகுத்து வழங்கினார். வேல்விழி சிவக்கொழுத்து நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை செயலாளர் வள்ளி செய்திருந்தார்.