/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
ADDED : செப் 12, 2025 03:55 AM
புதுச்சேரி: பி.டெக், லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ம் தேதி நேரடி கலந்தாய்வு நடக்கிறது.
சென்டாக் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கான ஸ்டே கவுன்சிலிங் எனும் நேரடி கலந்தாய்வு வரும் 15ம் தேதி புதுச்சேரி இ.சி.ஆர்., காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.
காலை 11:00 மணிக்கு நடக்கும் முதல் அமர்வு கலந்தாய்வில் சென்டாக்கில் விண்ணப்பித்து பதிவு செய்த புதுச்சேரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
11:30 மணிக்கு நடக்கும் இரண்டாம் அமர்வு கலந்தாய்வில் புதுச்சேரியை சேர்ந்த சென்டாக்கில் இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும், மதியம் 2:00 மணிக்கு சென்டாக்கில் பதிவு செய்த பிற மாணவர்களுக்கும், 2:30 மணிக்கு சென்டாக்கில் பதிவு செய்யாத மாணவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்கள் https://meet.google.com/fuf-nxpp-fft என்ற இணைய இணைப்பு வாயிலாக பங்கேற்கலாம். இதேபோல், கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கலாம்.
புதுச்சேரி மாணவர்கள் சேர்க்கை பிறகு காலியிடங்கள் இருந்தால், அந்த இடங்கள் பிற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, சென்டாக் அறிவித்துள்ளது. உதவிக்கு 0413 - 2655570 / 2655571 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.