/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேனீ வளர்க்க பயிற்சி வரும் 20ம் தேதி நடக்கிறது தேனீ வளர்க்க பயிற்சி வரும் 20ம் தேதி நடக்கிறது
தேனீ வளர்க்க பயிற்சி வரும் 20ம் தேதி நடக்கிறது
தேனீ வளர்க்க பயிற்சி வரும் 20ம் தேதி நடக்கிறது
தேனீ வளர்க்க பயிற்சி வரும் 20ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூன் 11, 2025 07:54 AM
புதுச்சேரி; தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம் வரும் 20ம் தேதி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.
வேளாண் கூடுதல் இயக்குனர் (தோட்டக்கலை) அலவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலமாக தேனீ பெட்டிகள், தேனீ குடும்பங்கள் மற்றும் இதர உபகரணங்கள் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் மகரந்தம் சேர்க்கையில் தேனீக்களின் முக்கியத்துவம், உபதொழிலாக அல்லது முழுநேர தொழிலாகவோ செய்யக்கூடிய வாய்ப்புகள் தேன் மற்றும் இதர பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் முதலியவை பற்றிய ஒருநாள் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம் வரும் 20ம் தேதி புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது.
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.