ADDED : ஜூன் 11, 2025 07:53 AM

புதுச்சேரி; புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, தேர்தல் தாயார் நிலை குறித்துஆய்வுக்கூட்டம் தலைமை செயலக கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கினார். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், தேர்தல் தொடர்பான ஆயத்த நிலைகள், முன்னேற்பாடுகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கினார்.
தேர்தல் பதிவு அதிகாரிகள் வாக்குச்சாவடி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களுக்கு முறையாக பயிற்சி அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொறு வாக்குச்சாவடிக்கும்1,200 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுமாறு தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.