/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி
சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி
சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி
சமுதாய கல்லுாரியில் விழிப்புணர்வு பயிற்சி
ADDED : மார் 22, 2025 09:27 PM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்ப மையம் சார்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி பொறுப்பு முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் முருகேசன் வரவேற்றார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்ப மையத்தின் துணை பொது மேலாளர் அமித் நைன், பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, உற்பத்தித் துறையில் வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களாக மாறுவதற்கு ஆர்வமாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் சந்தன ஈஸ்வர் சிறப்புரையாற்றினார். தருண் ஸ்போர்ட்ஸ் வேர், புதுச்சேரி நிறுவன இயக்குனர் பாலமுருகன், ஒன் பஞ்ச் மேன் நிறுவன இயக்குனர் யுவராஜ் மற்றும் டிராபி மாலின் நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் விளையாட்டு வீரர்களை மேம்படுத்துதல், விளையாட்டு தொழில் முனைவோரின் தடைகளை உடைத்தல் மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெறும் உத்திகள் குறித்து பேசினர்.
உடற்கல்வி மற்றும் யோகா துறை உதவி பேராசிரியர் ஜெகதீஸ்வரி ஒருங்கிணைத்தார்.