ADDED : மே 27, 2025 12:42 AM
காரைக்கால் : காரைக்கால் கொத்தளம் பேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 30; கம்பி பிட்டர். இவரது அண்ணன் மகன் மாதேஷ் என்பவரை காரைக்கால் மேட்டு தெரு கொத்தளம் பேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் பிளம்பர் வேலைக்கு அழைத்துள்ளனர்.
இதற்கு ராஜ்குமார், மதேசை அவர்களுடன் வெளியில் செல்லக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
இதில் அத்திரமடைந்த செந்தில்குமார் விஜயராகவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் ராஜ்குமாரை ஆபாசமாக பேசி தாக்கினர். புகாரின் பேரில் செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.