/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : மே 27, 2025 12:41 AM

புதுச்சேரி : சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், 1995-97 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தற்போதிய தலைமை ஆசிரியர் ராமநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாணவி நளினி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் கோபிநாத், ரமேஷ், குமார், உஸ்மான் அலி, கார்த்திக், பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்று, முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு குரு பூர்ணிமா பூஜை செய்து, பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் 100 சதவீதம் தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின், முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது. இதில், 90க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனு ஆதி நன்றி கூறினார்.