/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தாண்டாவது விண்ணப்பங்கள் அதிகரிக்குமா?பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தாண்டாவது விண்ணப்பங்கள் அதிகரிக்குமா?
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தாண்டாவது விண்ணப்பங்கள் அதிகரிக்குமா?
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தாண்டாவது விண்ணப்பங்கள் அதிகரிக்குமா?
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு: இந்தாண்டாவது விண்ணப்பங்கள் அதிகரிக்குமா?
ADDED : ஜூன் 13, 2025 03:19 AM

புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் சென்டாக் விண்ணப்பத்தை வரவேற்றுள்ளது.
புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத பி.டெக்., இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், ஆன்-லைனில் (www.centacpuducherry.in) வினியோகிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வித் தகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
வரும் 26ம் தேதி மாலை 6 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்ப பதிவு வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
எஸ்.சி.,எஸ்.டி.,மாற்றுதிறனாளி மாணவர்கள் 500 ரூபாய் கட்டணமும், இதர பிரிவு மாணவர்கள் 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
எவ்வளவு சீட்டு
புதுச்சேரியில் இரண்டு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 344 பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது குறிப்பிடதக்கது.
மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிற மாநில மாணவர்களும் 1,500 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
போட்டியே இல்லை
புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மொத்தம் 344 பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சீட்கள் உள்ள போதிலும் குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பம் வருகின்றது. கடந்த 2023ம் ஆண்டு 236 பேர் விண்ணப்பித்தனர். கடந்தாண்டு(2024) புதுச்சேரியில் இருந்து 117 பேர், பிற மாநிலங்களில் இருந்து 25 பேர் என மொத்தமே 142 மாணவ மாணவிகள் தான் லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பித்தனர்.
இதனால் கடந்தாண்டு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித போட்டியும் இல்லாமல் சீட் கிடைத்தது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆறு அரசு பாலிடெக்னிக், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மொத்தம் 2,200 சீட்கள் உள்ளன. அப்படி இருந்தும், கூட கடந்த 6 ஆண்டுகளாகவே குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பி.டெக்., லேட்ரல் சேர்க்கைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
எனவே, இந்தாண்டாவது பி.டெக்.,லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு விண்ணப்பம் அதிகமாக குவியுமா என கவலையுடன் சென்டாக் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.