/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பு அமைச்சரிடம் முறையீடுவெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பு அமைச்சரிடம் முறையீடு
வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பு அமைச்சரிடம் முறையீடு
வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பு அமைச்சரிடம் முறையீடு
வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வணிகர் கூட்டமைப்பு அமைச்சரிடம் முறையீடு
ADDED : ஜன 06, 2024 05:31 AM

புதுச்சேரி : மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக வணிகர்கள் கூட்டமைப்பினர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து முறையிட்டனர்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரத்தில் பிளாஸ்டி பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் வெங்கடேசனை, ரவுடிகள் சுகன், சரத் ஆகியோர் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், நாட்டு வெடிகுண்டு எடுத்து வீசிய சம்பவத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கடேசனை, வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்த வணிகர்கள் கூட்டமைப்பினர், வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விபரங்களை தெரிவித்தனர்.
பின் அமைச்சரிடம் கூட்டமைப்பினர் அளித்துள்ள மனு:
அமைதியான புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் கவலை அளிக்கிறது. வணிகர்களிடமும், தொழில் முனைவோர் இடமும் மாமுல் கேட்டு மிரட்டுவது, இரவு நேரங்களில் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தடை செய்யப்பட்ட மருந்துகளைக் கேட்டு மிரட்டுவது, ஓட்டல், சிறு கடைகளிலில் மிரட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே இதுபோன்று வெடிகுண்டு வீசியும் கத்தியை கொண்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், போலீஸ் தீவிர கண்காணிப்பை பலப்படுத்தி, வணிகர் மற்றும் தொழில் முனைவோருக்கு அச்சமின்றி தொழில் செய்யும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய இருவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாவும், அச்சமின்றி தொழிற்சாலை இயங்க பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார்.