/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலைரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ADDED : பிப் 23, 2024 10:28 PM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அடுத்த வி.மணவெளி, தண்டுகரை வீதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலைமணி, 24. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு முன், திருமணம் நடந்த நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையால் விஜயா கோபித்துக்கொண்டு குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கலைமணி நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.