ADDED : ஜூலை 28, 2024 06:35 AM
புதுச்சேரி : குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அய்யங்குட்டிப்பாளையம், வெள்ளவாரி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 54; கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனை மனைவி லட்சுமி கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.