/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் டைமண்ட்ஸ் அணி வெற்றி பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் டைமண்ட்ஸ் அணி வெற்றி
பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் டைமண்ட்ஸ் அணி வெற்றி
பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் டைமண்ட்ஸ் அணி வெற்றி
பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் டைமண்ட்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூன் 13, 2024 05:56 AM

புதுச்சேரி : துத்திப்பட்டு சி.ஏ.பி., மைதானத்தில் நடந்த பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிபோட்டியில் டைமண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. கடந்த 6ம் தேதி துவங்கி நேற்று வரை, புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சி.ஏ.பி., மைதானத்தில் போட்டிகள் நடந்தது.
இதில் ஏன்ஜல்ஸ், குயின்ஸ், பிரின்சஸ், டைமண்ட்ஸ் என, 4 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் டைமண்ட்ஸ் மற்றும் பிரின்சஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று காலை 11:30 மணிக்கு நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் ஆடிய டைமண்ட்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 81 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பிரின்சஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 66 ரன்கள் எடுத்தது. டைமண்ட்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 22 ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த டைமண்ட்ஸ் அணியின் பூனம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் கவுரவத் தலைவர் தாமோதரன், செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன், கிரிக்கெட் அறிவுரை குழு தலைவர் ராஜூ மேத்தா ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கினர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருது பிரின்சஸ் அணியின் கவுதமிக்கும், சிறந்த பவுலர் விருது ஏன்ஜல்ஸ் அணியின் சாயலி லோங்கார்க்கும், ஆல்ரவுண்டர் விருது டைமண்ட்ஸ் அணியின் கவிஷாவிற்கும், தொடர் நாயகன் விருது டைமண்ட்ஸ் அணி பூனம், வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது குயின்ஸ் அணி பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.