/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலை., மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலை., மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலை., மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலை., மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலை., மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 13, 2024 05:55 AM

புதுச்சேரி : கல்வி கட்டண உயர்வினை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2024--25ம் ஆண்டில் கல்வி கட்டணம் 65 சதவீதம் உயர்த்தப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கட்டண உயர்வை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பல்கலைக் கழக கிளை நிர்வாகிகள் ஏராளமான பல்கலைக் கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்வி கட்டண உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டு தான் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகம் கல்வி கட்டணத்தை உயர்த்தியது. அடுத்த ஐந்தாண்டுக்குள் மீண்டும் கல்வி கட்டணம் உயர்வு, ஏழை மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயில முடியாத சூழலை உருவாக்கும் என்பதால் கட்டண உயர்வை பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும். அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும்' என்றனர்.