ADDED : ஜூன் 16, 2024 05:52 AM
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
லாஸ்பேட்டை அசோக் நகர் கவிக்குயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரூபி,50; இவர் நேற்று முன்தினம் காலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன ரூபியை தேடிவருகின்றனர்.