/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் எப்போது: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் எப்போது: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் எப்போது: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் எப்போது: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் எப்போது: மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:23 PM
புதுச்சேரி: நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு எப்போது விண்ணப்பம் வினியோகிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாகிக்கொண்டு இருக்கும் தருணத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.இந்தாண்டு 6461 பேர் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்த சூழ்நிலையில்,6318 பேர் மட்டுமே எதிர்கொண்டு எழுதினர்.
இதில் 3431 பேர் மருத்துவம் பயில தகுதியை பெற்றுள்ளனர்.தேர்ச்சி விகிதம் 54.30 சதவிதமாகும்.கடந்தாண்டை ஒப்பிடும்போது 0.64 சதவீதம் நீட் தேர்ச்சி குறைந்துள்ளது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு வரும் 10 ம்தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,எம்.பி.பி.எஸ்., பல்மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு எப்போது விண்ணப்பம் வரவேற்கப்படும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இருப்பினும் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அறிவிப்பு 10 ம்தேதி பிறகு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாக தேர்வு முகமை ரிசல்ட்டினை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியானதும்,சென்டாக் விண்ணப்ப சேர்க்கை அறிவிப்பும் உடனடியாக வெளியிடப்படும்.ஏற்கனவே நீட் மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கு சென்டாக் அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளது.தகவல் குறிப்பேடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை பணிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு காலதாமதம் இல்லாமல் நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றனர்.
நீட் தேர்ச்சி பட்டியல்
தேசிய தேர்வு முகமை நீட் தேர்ச்சி பட்டியலை வெளியிட்டாலும் ஒவ்வொரு மாநிலத்திற்குரிய தேர்ச்சி பட்டியலை அந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்கம் இன்னும் தரவில்லை.
இதனால் ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை இன்னும் சுகாதார துறை வெளியிடவில்லை. இந்த தேர்ச்சி பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகத்தினை இன்று 6 ம்தேதி தொடர்பு கொண்டு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது,நீட் தேர்ச்சி பட்டியலை பெற சுகாதார துறையின் சார்பில் அதிகாரி ஒருவர் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார். அவர் நேரில் சென்றதும்,மாநிலத்திற்கான நீட் தேர்ச்சி பட்டியல் உள்ளடங்கிய பென்டிரைவ் தரப்படும்.அவரிடம் இதற்கான பாஸ்வேர்டு தரப்படாது.
அந்த பென்டிரைவை அவர் பெற்று, புதுச்சேரி திரும்பியதும், மீண்டும் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரியை தொடர்பு கொண்டு பேச வேண்டும்.அப்போது தான் அந்த பென்டிரைவ்வில் உள்ள தகல்களை பெற பாஸ்வேர்டு கிடைக்கும்.
அந்த பாஸ்வேர்டு கொண்டு திறந்து, மதிப்பெண், இட ஒதுக்கீடு வாரியாக மாணவர்களை பிரித்து ஆட்சேபனைக்காக பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி மாணவர்களிடம் ஆட்சேபனைகள் பெற்று பட்டியலை செம்மையாக திருத்தம் செய்த பிறகு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.இதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்றனர்.