/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெற்றிக்கு காரணம் என்ன? வைத்திலிங்கம் 'பளீச்' வெற்றிக்கு காரணம் என்ன? வைத்திலிங்கம் 'பளீச்'
வெற்றிக்கு காரணம் என்ன? வைத்திலிங்கம் 'பளீச்'
வெற்றிக்கு காரணம் என்ன? வைத்திலிங்கம் 'பளீச்'
வெற்றிக்கு காரணம் என்ன? வைத்திலிங்கம் 'பளீச்'
ADDED : ஜூன் 05, 2024 12:32 AM
புதுச்சேரி: 'தன்னை தோற்கடிக்க முடியாது என கூறிய பா.ஜ.,வின் மாயைக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்' என, காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம்,முதல் மற்றும் 2வது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் அதிக ஓட்டுகள் பெற்ற தகவல் தெரிந்தவுடன், நேற்று மதியம் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்தார். அங்கு மீடியா அறையில் அமர்ந்து தேர்தல் நிலவரங்களை சில நிமிடம் கவனித்தார்.
அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது வெற்றி இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்கு பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.
தன்னை தோற்கடிக்க முடியாது என கூறிய பா.ஜ., மாயை, தன்னை கடவுளாக காட்டி கொண்ட பிரதமருக்கு மக்கள் இந்த தேர்தலில் மரண அடி கொடுத்துள்ளனர். எண்ணுடைய வெற்றி இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு தான் தர வேண்டும். இண்டியா கூட்டணியில் உள்ள அனைவருக்கும் நன்றி.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தான் மக்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பா.ஜ., நிச்சயம் ஆட்சி அமைக்கும் என யாரும் கூறவில்லை என கூறினார்.