/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணை ராணுவத்தினருடன் போலீசார் வாக்குவாதம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு துணை ராணுவத்தினருடன் போலீசார் வாக்குவாதம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
துணை ராணுவத்தினருடன் போலீசார் வாக்குவாதம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
துணை ராணுவத்தினருடன் போலீசார் வாக்குவாதம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
துணை ராணுவத்தினருடன் போலீசார் வாக்குவாதம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 05, 2024 12:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் மையத்தில், துணை ராணுவத்தினருடன் போலீசார் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம், 26 பேர் போட்டியிட்டனர். கடந்த, ஏப்.19,ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவில், 76.57 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
இந்த ஓட்டு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு, லாஸ்பேட்டை, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரி, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மாகி ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாம், எஸ்.ஆர்.கே அரசு கலைக்கல்லுாரி ஆகிய இடங்களில், பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை 7:00 மணிக்கு, 'ஸ்ட்ராங்' அறையில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், முகவர்கள் முன்னிலையில் வெளியே எடுத்து வரப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவங்கியது.
முதலில் 3 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரியில், ஓட்டுகள் எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவப்படையினர் வந்தனர்.
அவர்கள் மொபைல் போன் கொண்டு வந்ததற்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், துணை ராணுவப்படையினரை, போலீசார் நுழைவு வாயிலில் இருந்து, வெளியேற்றினர்.
'இரு மாத காலமாக, இங்கு பணியாற்றி வருகிறோம். திடீரென்று, இப்படி சொன்னால், எப்படி..' என, துணை ராணுவத்தினர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு போலீசார், 'தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவை தான் அமல்படுத்துகிறோம்' எனக்கூறினர்.
இது குறித்து போலீஸ் மற்றும் தேர்தல் துறை உயரதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.