/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை
ADDED : ஜூலை 09, 2024 04:53 AM

புதுச்சேரி : பாலா திரிபுரசுந்தரி கோவி லில் விமான பாலஸ்தாபன பூஜை நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த இரும்பையில், மொரட்டாண்டி டோல்கேட் அருகில், பாலா திரிபுரசுந்தரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராஜமாதங்கி அம்மனுக்கு புதிதாக சன்னதி அமைப்பதற்கான திருப்பணிகள், கடந்த மார்ச் 5ம் தேதியன்று துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் மூலவர் விமானம் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதி விமானங்களில் திருப்பணிகள் செய்வதற்காக பாலஸ்தாபனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை நேற்று காலை நடந்தது. காலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் விமானங்களின் பாலஸ் தாபன பூஜை நடந்தது.
'திருப்பணி வேலைகள் முடிந்தவுடன், கும்பாபி ேஷக தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, ஆலயத்தின் கணேஷ் குருக்கள் தெரிவித்தார்.