/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூவர் மீது பைக் மோதல் வீடியோ வைரல் மூவர் மீது பைக் மோதல் வீடியோ வைரல்
மூவர் மீது பைக் மோதல் வீடியோ வைரல்
மூவர் மீது பைக் மோதல் வீடியோ வைரல்
மூவர் மீது பைக் மோதல் வீடியோ வைரல்
ADDED : ஜூன் 26, 2024 02:21 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்து சென்ற இளைஞர் உள்ளிட்ட 3 பேர் மீது பைக் மோதி செல்லும் சி.சி.டி.வி., வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி, சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். கல்வித்துறையில் தொலைபேசி ஆபரேட்டராக பணிபுரிகிறார்.
இவர் தனது மனைவி கோமதியுடன் கடந்த, 20ம் தேதி இரவு மேட்டுப்பாளையம் பிப்டிக் இன்டஸ்டிரியல் பிரதான சாலையில் உள்ள, சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது குருவேந்தன், 17, என்ற இளைஞரும் அதே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த பைக் ஒன்று, முதலில் குருவேந்தன் மீது பின்பக்கமாக மோதி கீழே தள்ளி விட்டு, தொடர்ந்து பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த தம்பதி மீது மோதியது.
இதில், ராமநாதன், கோமதி, குருவேந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய சண்முகாபுரத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர் மீது, வடக்கு போக்குவரத்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்திய சி.சி.டி.வி., வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.