/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷ வாயுவால் பலி பா.ம.க., வலியுறுத்தல் விஷ வாயுவால் பலி பா.ம.க., வலியுறுத்தல்
விஷ வாயுவால் பலி பா.ம.க., வலியுறுத்தல்
விஷ வாயுவால் பலி பா.ம.க., வலியுறுத்தல்
விஷ வாயுவால் பலி பா.ம.க., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 12, 2024 07:16 AM
புதுச்சேரி : விஷ வாயு தாக்கி, உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, பா.ம.க., தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில பா.ம.க., அமைப்பாளர் கணபதி, மாநில துணை அமைப்பாளர் வடிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆறுதல் கூறினர்.
மாநில அமைப்பாளர் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் ஓராண்டு காலமாக, இது மாதிரி லேசான விஷவாயு கசிவு இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், சுத்தம் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டிக் டேங்க் கழிவு நீர் குழாயை, தண்ணீர் மூலம் 'பம்ப்' செய்யாமல் விட்டதன் விளைவு, விஷவாயு உருவாகி அந்த பகுதி முழுவதும் பரவி உள்ளது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி உதவியும் அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்' என்றார்.