ADDED : ஜூன் 12, 2024 03:07 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த புது நகரில் சுகாதாரத்துறை களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த தகவல் அறிந்ததும், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தலைமையிலான டாக்டர் குழுவினர் புதுநகருக்கு விரைந்தனர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், புது நகரில் வேறு யாருக்கேனும் மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வரும்படி அழைப்பு விடுத்தனர்.
களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்ததுடன், முக கவசம் அணியும்படி அறிவுறுத்தினர்.
சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு கூறுகையில், 'கழிவறை பாதாள சாக்கடையில் நச்சு காற்றுகள் கார்பன்மோனாக்சைடு, நைட்ரஜன் சல்பைடு, மீதேன் வெளியேறினால் கழிவறைக்குகள் ஆக்சிஜன் குறைந்து விடும். அதை சுவாசிக்கும்போது, நினைவு இழப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
விஷவாயு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்ற 2 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
டாய்லெட்டில் இருந்து நேரடியாக பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுத்து இருந்தால், இதுபோன்ற விஷவாயு வெளியேறி இருக்கலாம் என தெரிவித்தார்.