Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடை செய்ய வேண்டும்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடை செய்ய வேண்டும்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடை செய்ய வேண்டும்

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடை செய்ய வேண்டும்

ADDED : ஜூலை 28, 2024 04:53 AM


Google News
புதுச்சேரி : ஆந்திரா, பீகார் மாநிலங்களை போல் புதுச்சேரி மாநிலத்திற்கும் அதிக நிதி தர வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் வைத்திலிங்கம் எம்.பி., பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் தனி நபர் வருமானம் ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏழையாக உள்ள 80 கோடி மக்களின் தனி நபர் வருமானம் மாதம் ரூ.4 ஆயிரத்திற்கு மேல் இல்லை. விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

25 கிலோஅரிசி சிப்பம் ரூ.700ல் இருந்து 1,700 ஆகவும்,கோதுமை 30ல் இருந்து 65 ஆகவும், புளி 45ல் இருந்து60 ஆகவும், பருப்பு 70ல் இருந்து 140 ஆகவும், 10 முட்டை 20ல் இருந்து 60 ரூபாயாக ஆகஉயர்ந்துள்ளது.

ஏழைகளுக்கு ஊதியம் உயர்தப்படவில்லை. 100 நாள் வேலைக்குகூலி 250ல் இருந்து300 ஆகத்தான் உயர்ந்துள்ளது. குறைந்த படிப்பு படித்தவர்களுக்கு 6 ஆயிரம் சம்பளம், டிகிரி முடித்தவர்களுக்கு 12 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இல்லை.

ஏழைகளை பற்றி சிந்திக்காத அரசை மக்கள் விரும்பவில்லை. அதனால் தான் பா.ஜ.,மைனாரிட்டி அரசாக வந்துள்ளது. மைனாரிட்டி ஆக்கியது இண்டியா கூட்டணி. நாங்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுகிறோம். ஆனால் நீங்கள் இப்போது ஜெய் ஜெகன்நாத் என்று கூறுகிறீர்கள். ஆந்திரா, பீகாருக்கு செய்துள்ளதைப்போல் புதுச்சேரிக்கும் செய்யுங்கள்.

புதுச்சேரிக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். கடந்தாண்டு ரூ.3 ஆயிரத்து 389 கோடியும், இந்தாண்டு ரூ. 3, 269 கோடியும் தந்துள்ளீர்கள், கடந்தாண்டை விட ரூ.120 கோடி நிதி குறைவு. புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை அரசு மூலம் நஷ்டம் இல்லாமல் நடக்கிறது. ஆகையால் புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடை செய்ய வேண்டும், புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us