/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தல் இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தல்
இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தல்
இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தல்
இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 06:42 AM

புதுச்சேரி, : புதுச்சேரி இந்திய கம்யூ., கட்சி மாநிலக்குழு கூட்டம் நேற்று, நிர்வாகக் குழு உறுப்பினர் அமுதா தலைமையில், தலைமை அலுவலகத்தில் நடந்தது.
தேசிய செயலாளர் நாராயணா, தேசியக் குழு முடிவுகள் குறித்து பேசினார்.
மாநில செயலாளர் சலீம் மாநில அரசியல் நிலை குறித்து பேசினார். சேது செல்வம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
தினேஷ் பொன்னையா, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நாரா கலைநாதன், அந்தோணி, ரவி, அபிஷேகம், கீதநாதன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநில உரிமைகளை பறித்து கூட்டாட்சி முறைக்கு எதிராக செயல்படும், பா.ஜ., ஆட்சிக்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஊழலால் தோல்வி அடைந்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பதிலாக புதுச்சேரி அரசு, மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்சாரம், குடிநீர், கழிவு நீர், மேம்பாலங்கள், தரமான சாலைகள், பார்க்கிங் வசதிகள், மார்க்கெட் கட்டடங்கள் என அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரி அரசின் 'குரூப்- பி' அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உரிமையை பறிக்கும் அரசாணையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.