/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளி கள் கடலுார் சாலையில் விபத்து அபாயம் சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளி கள் கடலுார் சாலையில் விபத்து அபாயம்
சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளி கள் கடலுார் சாலையில் விபத்து அபாயம்
சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளி கள் கடலுார் சாலையில் விபத்து அபாயம்
சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளி கள் கடலுார் சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 09, 2024 03:54 AM

புதுச்சேரி, : கடலுார் சாலை சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளிகள் விடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் மிகுந்த சாலையாக உருவெடுத்துள்ளது.
புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கடலோர மாவட்டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தினமும் பல்வேறு தேவைகளுக்காக, புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் ஏராளமானோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம்வாய்ந்த புதுச்சேரி - கடலுார் சாலையில் விபத்துக்களை தடுக்க, மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், நோணாங்குப்பம் வரை சாலையின் நடுவில் மீடியன் பிளாக் எனப்படும் சிறிய சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு சென்டர் மீடியன் முழுமையாக போடப்படவில்லை.
மாநில எல்லையான முள்ளோடை வரை சென்டர் மீடியனை நீட்டிக்காமல், ஆங்காங்கே திட்டு திட்டாக அமைத்துள்ளனர். இதனால் எந்த இடத்தில் சென்டர் மீடியன் உள்ளது, எந்த இடத்தில் இல்லை என தெரியாமல் வெளியூர் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் மட்டுமல்லாமல், பகலிலும் தொடர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, கடலுார் சாலை உச்சக்கட்ட விபத்து அபாயம் மிகுந்த சாலையாக உருவெடுத்துள்ளது. சென்டர் மீடியன் இடைவெளிகள் வழியாக திடீரென குறுக்காக புகும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் தொடர் கதையாக உள்ளது.
சென்டர் மீடியனில் இடைவெளி விடுவதற்கு பொதுப்பணித்துறை எந்த ஆய்வும் செய்யவில்லை. அப்பகுதி மக்களின் கருத்தையும் கேட்கவில்லை. அதிகார பின்னணி உள்ளவர்கள் கூறியதற்கு எல்லாம் வளைந்து கொடுத்து சென்டர் மீடியனில் இடைவெளிகளை சகட்டுமேனிக்கு விட்டுள்ளனர்.
எங்கெல்லாம் சாராயக்கடைகள், பார்கள் உள்ளதோ அங்கெல்லாம் இடைவெளியை தேவையில்லாமல் விட்டு, விசுவாசத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அடுத்து, அரசியல் அழுத்தம் காரணமாக, பெட்ரோல் பங்குகளுக்கு இடைவெளி, கல்யாண மண்டபங்களுக்கு இடைவெளி என அலட்சியம் காட்டி உள்ளதால், கடலுார் சாலை மரண சாலையாக உருவெடுத்து மிரட்டி வருகிறது.
விபத்துகளை தடுக்க நல்ல நோக்கத்திற்காக சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இதில் சிலருக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும், பொதுநோக்கத்திற்காக ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.
ஆனால், கடைக்கு கடை இடைவெளி கேட்கிறார்கள் என்பதற்காக இப்படி ஒவ்வொருவருக்கும் சென்டர் மீடியனில் இடைவெளி விட்டுக்கொண்டே சென்றால், சென்டர் மீடியன் அமைப்பதற்கான நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். சாலை விபத்துகளும் அதிகரிக்கும்.
கடலுார் சாலையில் தேவையற்ற இடங்களில் உள்ள இடைவெளியை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட பொதுப்பணித் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.