Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை., முன்னேற்றம்

உலக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை., முன்னேற்றம்

உலக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை., முன்னேற்றம்

உலக தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை., முன்னேற்றம்

ADDED : ஜூன் 22, 2024 04:36 AM


Google News
புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை,கியூ.எஸ்.,உலக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் புதுச்சேரி பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை,கியூ.எஸ்.,ஆசிய பல்கலைக்கழக தரவரிசை,கியூ.எஸ்.,பிரிக்ஸ் பல்கலைக்கழக தரவரிசை,தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு,அவுட்லுக் சர்வதேச தரவரிசை மதிப்பீட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றது.

கியூ.எஸ்.,தரவரிசை


அன்மையில் 106 நாடுகளில் உள்ள 5663 நிறுவனங்கள் பங்கேற்ற கியூ.எஸ்.,உலக பல்கலைக்கழக தரவரிசையில் உலக அளவில் 1201-1400 க்கு இடையில் தரவரிசையை எட்டியுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மொத்தமே 46 கல்வி நிறுவனங்கள் மட்டுமே கியூ.எஸ்.,உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

டைம்ஸ் தரவரிசை


இதேபோல் உலக பல்கலைக்கழக தரவரிசையான டைம்ஸ் உயர்கல்வி

ஐக்கிய நாடுகளில் நிலையான வளர்ச்சி இலக்குகள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து,2024 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2152 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

இதில் ஒட்டுமொத்த மதிப்பெண் 64.5-69.8 பெற்று 6001-800 ரேங்கினை அடைந்துள்ளது.கடந்த ஆண்டியின் 59.1-66.7 மதிப்பெண்ணை ஒப்பிடும்போது உயர்ந்துள்ளது.

துணைவேந்தர் பாராட்டு


புதுச்சேரி பல்கலைக்கழகம் துாய்மையான ஆற்றல்,குறைக்கப்பட்ட சமத்துவமின்மை,பொறுப்பான நுகர்வு,உற்பத்தி,காலநிலை நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகிறது.அதுமட்டுமின்றி வறுமை இல்லாமை,நல்ல ஆரோக்கியம்,நல்வாழ்வு,சுத்தமான குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு கூறும்போது,பல்கலைக்கழகம் இந்தசாதனையை ஆசிரியர்கள்,ஊழியர்கள்,மாணவர்கள் அர்ப்பணிப்புடன் எட்டியுள்ளது.அனைவருக்கும் பாராட்டுக்குள்.

எதிர்காலத்தில் பல்கலைகழகத்தின் உலகளாவிய நிலைப்பாடு மேம்படுத்தப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us