/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யூகோ வங்கி கடன் திட்டம் கலந்துரையாடல் யூகோ வங்கி கடன் திட்டம் கலந்துரையாடல்
யூகோ வங்கி கடன் திட்டம் கலந்துரையாடல்
யூகோ வங்கி கடன் திட்டம் கலந்துரையாடல்
யூகோ வங்கி கடன் திட்டம் கலந்துரையாடல்
ADDED : மார் 12, 2025 06:34 AM

புதுச்சேரி : புதுச்சேரி யூகோ வங்கி ஒருங்கிணைந்த கடன் மையம் சார்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நடந்தது.
புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடலில் கோல்கட்டா யூகோ வங்கி துணை பொது மேலாளர் ரவிசங்கர் பாத்ரக் தலைமை தாங்கினார். அசோக்பாபு எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
சென்னை கிளை உதவி பொது மேலாளர் உமாதேவி மல்லயா, புதுச்சேரி யூகோ வங்கி உதவி பொது மேலாளர் குல்தீப் மிஸ்ரா, முதன்மை மேலாளர்கள் பவன் புரோகித், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறு, குறு, நடுத்திர தொழில் கடன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.