/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.எப்.டி., மில்லை தனியார் உதவியோடு நடத்த வேண்டும் ஜான்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் ஏ.எப்.டி., மில்லை தனியார் உதவியோடு நடத்த வேண்டும் ஜான்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஏ.எப்.டி., மில்லை தனியார் உதவியோடு நடத்த வேண்டும் ஜான்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஏ.எப்.டி., மில்லை தனியார் உதவியோடு நடத்த வேண்டும் ஜான்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஏ.எப்.டி., மில்லை தனியார் உதவியோடு நடத்த வேண்டும் ஜான்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 06:35 AM
புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜான்குமார் பேசியதாவது:
போட்டி தேர்வு மூலம் நேர்மையான முறையில் 2,444 பேர் அரசு பணியிடங்களில் அமர்த்த உறுதுணையாக இருந்த கவர்னருக்கு பாராட்டுகள். போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரை மேம்பாலம், கடலூர் சாலை 20 கி.மீ., தூரத்துக்கு அகலப்படுத்தும் திட்டத்துக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே சமயம், இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை சாலையை அகலப்படுத்த ரூ.150 கோடி தான் செலவாகும். இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீனவர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள 70 மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் ஒரு நாளைக்கு 7 கோடி லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சப்படுகிறது. இதனால் நிலத்தடிக்குள் கடல்நீர் உட்புகுகிறது.
எனவே, வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏஎப்டி மில்லை தனியார் உதவியோடு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.