/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் சென்னை வாலிபர்கள் இருவர் கைது பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் சென்னை வாலிபர்கள் இருவர் கைது
பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் சென்னை வாலிபர்கள் இருவர் கைது
பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் சென்னை வாலிபர்கள் இருவர் கைது
பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் சென்னை வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஜூன் 01, 2024 04:23 AM

புதுச்சேரி : நோ பார்க்கிங்கில் நின்ற காரை எடுக்குமாறு கூறிய பெண் போலீசை தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். தப்பி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் பாரதி பூங்கா, குபேரர் சிலை அருகே நேற்று இரவு 7:00 மணியளவில், டாடா கார் (டி.என்.02, பி.ஓ.4469) நோ பார்க்கிங்கில் நின்றது. பணியில் இருந்த கிழக்கு பகுதி போக்குவரத்தில் பணிபுரியும் அர்ச்னா என்ற பெண் போலீசார் அங்கு சென்று, நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தக் கூடாது என காரில் இருந்தவர்களிடம் கூறினார்.
தொடர்ந்து, காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறினார். அவர், கூறியதை கேட்காமல், காரில் மது போதையில் இளம் பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து பெண் போலீசாரை தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
உடனே பணியில் இருந்த சக போலீசாருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதை அறிந்த காரில் இருந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றார்.
அதையடுத்து, போதையில் இருந்து இரண்டு வாலிபர்களையும் காருடன் அழைத்து சென்று, போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள், சென்னை திருமங்கலத்தை சேர்ந்த தேவராஜ், 28; சஞ்சய், 23, ஆகியோர் என, தெரியவந்தது.
தேவராஜ் சென்னையில் உள்ள கலெக்டர் வீட்டில், உதவியாளராகவும், சஞ்சய் ஐ.டி., கம்பெனியில், வேலை பார்ப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இது குறித்து பெரியக்கடை போலீசார், போக்குவரத்து பெண் போலீசாரை, தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர்.
மேலும், தப்பி சென்ற இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.