/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜவகர் சிறுவர் இல்ல கோடை பயிற்சி 1,627 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல் ஜவகர் சிறுவர் இல்ல கோடை பயிற்சி 1,627 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல்
ஜவகர் சிறுவர் இல்ல கோடை பயிற்சி 1,627 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல்
ஜவகர் சிறுவர் இல்ல கோடை பயிற்சி 1,627 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல்
ஜவகர் சிறுவர் இல்ல கோடை பயிற்சி 1,627 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல்
ADDED : ஜூன் 01, 2024 04:25 AM

புதுச்சேரி, : கோடை சிறப்பு முகாமில் பங்கேற்ற 1,627 மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்ககத்தின் கீழ், ஜவகர் சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஐந்து இடங்களில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் மே 2ம் தேதி துவங்கியது. முகாமை பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடனம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கிதார், கீபோர்டு, டிரம்ஸ், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ என, 13 கலைகளை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று வரை நடந்த சிறப்பு முகாமில், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,627 மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் 579 பேர், லாஸ்பேட்டை அரங்கசாமி நாயக்கர் அரசு பள்ளியில் 361, கதிர்காமம் அரசுப் பள்ளியில் 361, நோணாங்குப்பம் அரசுப் பள்ளியில் 173, வில்லியனுார் அரசு பெண்கள் பள்ளியில் 153 பேரும் பயிற்சியில் பங்கேற்றனர்.
கோடை சிறப்பு முகாமில் நிறைவு விழா நேற்று நடந்தது. தொடக்க கல்வி துணை இயக்குனர் முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
ஏற்பாடுகளை ஜவகர் பால்பவன் தலைமை ஆசிரியர் மணிவேல், பட்டதாரி ஆசிரியர் செல்வதாஸ், ஸ்டோர் கீப்பர் விக்னேஷ்வரன், எல்.டி.சி., செல்வகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.