Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

ADDED : ஜூலை 08, 2024 04:03 AM


Google News
புதுச்சேரி: கன்னியக்கோவிலில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் அடுத்த கன்னியக்கோவில் பாலம் அருகில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் பிள்ளையார்குப்பம் ராஜேஷ், 19, ஈச்சங்காடு சுரேந்தர், 23, என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, இருவர் மீதும் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us