/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாழை நோய் கட்டுப்படுத்த செயல் விளக்கம் வாழை நோய் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
வாழை நோய் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
வாழை நோய் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
வாழை நோய் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
ADDED : ஜூலை 08, 2024 04:03 AM

புதுச்சேரி: வேளாண் துறை சார்பில் வாழையில் நோய் கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டம் சார்பில், மதகடிப்பட்டு பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில் வாழையில் வாடல், இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்துதல் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. துணை வேளாண் இயக்குநர் சாந்தி வாசுதேவராஜ் தலைமை தாங்கினார். வேளாண் அதிகாரி நடராஜன், வாழையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.
அப்போது, சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி வாழையில் எவ்வாறு பயன்படுத்துதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு திரவி சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி இலவசமாக வழங்கப் பட்டது.
ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பக்கிரி, புவனேஸ்வரி, சண்முகம், ஜெயசங்கர், சுபாஷ் செய்திருந்தனர்.