/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் வாலிபர் பலி பிறந்த நாளில் சோகம் விபத்தில் வாலிபர் பலி பிறந்த நாளில் சோகம்
விபத்தில் வாலிபர் பலி பிறந்த நாளில் சோகம்
விபத்தில் வாலிபர் பலி பிறந்த நாளில் சோகம்
விபத்தில் வாலிபர் பலி பிறந்த நாளில் சோகம்
ADDED : ஜூலை 25, 2024 05:28 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பிறந்த நாளின்போது பைக் விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் அடுத்த கொம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் அசோக், 21; அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள பேட்டரி கடையில் வேலை செய்தார். நேற்று முன்தினம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனுார் பெரிய கோவிலுக்கு செல்வதற்காக, ஒதியம்பட்டியில் உள்ள நண்பர் கார்த்தி என்பவரை அழைத்து செல்ல, அவரது வீட்டிற்கு சென்றார்.
வீட்டின் அருகே சென்றபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் கார்த்திக் வீட்டின் மதில் சுவரில் மோதியது. தலையில் படுகாயமடைந்த அசோக்கை அருகே இருவந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
விபத்து குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்த நாளில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.