Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

ADDED : ஜூலை 25, 2024 05:27 AM


Google News
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை, தாகூர் கலைக்கல்லுாரி அருகே 3 வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்சார் பாஷா மற்றும் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியை சேர்ந்த மதன், 19; கிருபானந்த, 18; மடுவுப்பேட் பகுதியை சேர்ந்த லோகேஷ், 18; என தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us