தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 29, 2024 04:56 AM

புதுச்சேரி, : புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த முப்பெரும் விழாவில், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் முப்பெரும் விழா நடந்தது. தமிழ்ச்சங்க செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார்.
பொருளாளர் அருள்செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, துணைச்செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச்சங்க துணைத் தலைவர் ஆதிகேசவனார், பிரெஞ்சு பேராசிரியர் சண்முக சுந்தரம், மறைமலை அடிகளார் பேத்தி கலைச்செல்வி ஆகியோருக்கு, புதுச்சேரி தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை, புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வழங்கினார். ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ராசா, ஆனந்தராசன், சிவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.