/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தென் மண்டல கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கு முதல் பரிசு தென் மண்டல கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கு முதல் பரிசு
தென் மண்டல கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கு முதல் பரிசு
தென் மண்டல கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கு முதல் பரிசு
தென் மண்டல கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கு முதல் பரிசு
ADDED : ஜூலை 29, 2024 04:49 AM

புதுச்சேரி, தென் மண்டல அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி முதல் பரிசு வென்றது.
புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில் தென் மண்டல அளவிலான 17வது சீனியர் 8 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜிப்மர் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங் கானா ஆகிய 6 மாநில வீரர் வீராங்கணைகள் பங்கேற்றனர். இறுதி போட்டி நேற்று நடந்தது.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு - புதுச்சேரி அணிகள் மோதின. ஆண்கள், பெண்கள் இரு பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது. புதுச்சேரி அணி 2வது இடம் பிடித்து.
அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க செயலாளர் ரத்தின பாண்டியன் தலைமை தாங்கினார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுலக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சுழற்கோப்பை, பதக்கம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.