/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 24, 2024 06:24 AM
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் ஒலக்கூர் அய்யனாரப்பன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், ஒலக்கூர் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தையொட்டி, பக்தர்கள் பொங்கலிட்டு வழிப்பட்டனர். தொடர்ந்து, அய்யனாரப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று இரவு அய்யனாரப்பன், பூரணி, புஷ்கலை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது.