/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி
ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி
ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி
ரேஷன் கடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி
ADDED : ஜூலை 24, 2024 06:24 AM

புதுச்சேரி: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய பொருட்கள் குறித்து, சின்னமுதலியார்சாவடி ரேஷன் கடையில் முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும். அதற்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு அரிசி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.
சமீபத்தில், டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த முதல்வர் ரங்கசாமி திடீரென புறப்பட்டு, தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை கையில் பெற்று அதன் தரம் குறித்து பார்வையிட்டார். ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வேறு என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது கேட்டறிந்ததார்.