/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு
மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு
மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு
மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் வெடித்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 10, 2024 09:58 PM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் கல்லுாரி மாணவர்கள் சென்ற பஸ்சின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பி.எட்., கல்லுாரி மாணவர்கள் 2 பஸ்களில், கல்வி சுற்றுலாவிற்காக புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, ஒரு பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால், அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பின், டிரைவர் பாதுகாப்பாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே, பஸ் டயர் வெடித்த சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தின் உள்ளே இருந்த போலீசார், ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதா என நினைத்து வெளியே ஓடிவந்து பார்த்தனர். எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், நிம்மதியுடன் திரும்பினர். பின், வேறு டயர் மாற்றப்பட்டு மீண்டும் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.