ADDED : ஜூலை 10, 2024 09:58 PM
புதுச்சேரி: முன்விரோதத்தில் சகோதரர்களை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி குளக்கரை வீதி கல்வே பங்களாவை சேர்ந்தவர் முருகன், 50. இவரது குடும்பத்திற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சேட்டு, 35, அவரது தம்பி சுந்தர், 30; சகோதரிகள் கிருஷ்ணா, 30; சாந்தி, 32; ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. கடந்த 7ம் தேதி சேட்டு தனது குடும்பத்தினருடன் முருகனின் அண்ணன் சுப்ரமணி வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டு ஆபாசமாக திட்டினார். அதனை கண்டித்த முருகன் மற்றும் சுப்ரமணியை சிமெண்ட் கல்லால் தாக்கினர். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சேட்டு உள்ளிட்ட 4 பேர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.