/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு
குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு
குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு
குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 04, 2024 06:31 AM
திருக்கோவிலுார், : மணலுார்பேட்டையில் குளிர்பான கடையில் ரூ.1.70 லட்சம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதம்பாஷா மகன் மாலிக்,42; இவர், மெயின் ரோட்டில், குளிர்பானம் ஏஜன்சி மற்றும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 8:00 மணியளவில் கடையை திறந்துபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.1.70 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மாலிக் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.