/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் சிதம்பரம் போலீசில் தாய் புகார் காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் சிதம்பரம் போலீசில் தாய் புகார்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் சிதம்பரம் போலீசில் தாய் புகார்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் சிதம்பரம் போலீசில் தாய் புகார்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் சிதம்பரம் போலீசில் தாய் புகார்
ADDED : ஜூன் 04, 2024 06:32 AM

சிதம்பரம், : சிதம்பரத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் நிவேதிதா,25; சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பொறியியல் கல்லுாரியில் 5 ஆண்டிற்கு முன் படித்தபோது, அதே கல்லுாரியில் படித்த சிதம்பரம் பள்ளிப்படையை சேர்ந்த கபிலர் மகன் சுபாஷ் சந்திரபோஸ்,30; என்பவரை காதலித்துள்ளார்.
இவர்கள் திருமணத்திற்கு நிவேதிதாவின் தாய் கமலம், எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை மீறி, கடந்த 2022 ம் ஆண்டு சுபாஷ்சந்திரபோசை, நிவேதிதா திருமணம் செய்து கொண்டு, பள்ளிப்டையில் உள்ள சுபாஷ்சந்திரபோஸ் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார்.
இருவரும், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில், வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதிதா துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
நிவேதிதா இறந்தது குறித்து, கரூரில் உள்ள அவரது தாய்க்கு கூட தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மகள் இறந்தது குறித்து தகவலறிந்த நிவேதாவின் தாய் கமலம், சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனது மகளை கொடுமை படுத்தியதால் அவர் இறந்துள்ளார்.
இதுகுறித்து முழுமையாக விசாரித்து, இறப்பிற்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என, புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.