/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியை அடித்து மாணவி மயக்கம்: போலீசார் விசாரணை ஆசிரியை அடித்து மாணவி மயக்கம்: போலீசார் விசாரணை
ஆசிரியை அடித்து மாணவி மயக்கம்: போலீசார் விசாரணை
ஆசிரியை அடித்து மாணவி மயக்கம்: போலீசார் விசாரணை
ஆசிரியை அடித்து மாணவி மயக்கம்: போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 21, 2024 05:46 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
நோணாங்குப்பத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று காலை பள்ளிக்கு வந்தார்.வகுப்பில் இருந்த அந்த மாணவியை அழைத்த ஆசிரியை ஒருவர் வீட்டு பாடம் எழுதுவது தொடர்பாக கேட்டு, அவரை அடித்தார்.
அதில், மாணவின் முதுகில் வீக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சக ஆசிரியர்கள் அம்மாணவியை அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தகவலறிந்த, மாணவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று, மாணவியை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. பெற்றோரை பள்ளி முதல்வர் அழைத்து சமதானம் செய்தார். அம் மாணவியின் தாய், தனது மகளை அழைத்து சென்று கொண்டு, அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அரியாங்குப்பம், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் , சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர், ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.