/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலி பணி நியமன ஆணை அனுப்பி ரூ. 19.79 லட்சம் மோசடி சேலம் ஆசாமிக்கு போலீஸ் வலை போலி பணி நியமன ஆணை அனுப்பி ரூ. 19.79 லட்சம் மோசடி சேலம் ஆசாமிக்கு போலீஸ் வலை
போலி பணி நியமன ஆணை அனுப்பி ரூ. 19.79 லட்சம் மோசடி சேலம் ஆசாமிக்கு போலீஸ் வலை
போலி பணி நியமன ஆணை அனுப்பி ரூ. 19.79 லட்சம் மோசடி சேலம் ஆசாமிக்கு போலீஸ் வலை
போலி பணி நியமன ஆணை அனுப்பி ரூ. 19.79 லட்சம் மோசடி சேலம் ஆசாமிக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 21, 2024 05:45 AM
புதுச்சேரி: தமிழக அரசு மற்றும் ஜிப்மர் செவிலியர் பணிக்கு, வாட்ஸ்ஆப்பில் போலி பணி நியமன ஆணை அனுப்பி 19.79 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமியை கைது செய்ய தனிப்படை போலீசார் சேலம் விரைந்தனர்.
புதுச்சேரி, சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் ரவி மகன் கணேஷ், 24; அரசு வேலை தேடி வந்தார். கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் ரிஷிகேஷ் (எ) கார்த்திக், 40; என்பவருடன், கணேஷிற்கு பழக்கம் ஏற்பட்டது. தான் தி.மு.க., கட்சி பிரமுகர் எனவும், தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் தனக்கு நன்கு தெரியும் என கார்த்திக் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கணேஷ், தனக்கு தமிழக அரசில் வேலையும், தனது சகோதரிக்கு ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தர வேண்டும் என கேட்டார்.
அரசு வேலைக்காக கடந்த ஆண்டு செப்., மாதம் முதல் ஜனவரி வரை கூகுள்பே மூலம் பல தவணைகளில் ரூ. 12 லட்சம் அனுப்பினார். பின்பு நேரில் சந்தித்து ரூ. 7.79 லட்சம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, கணேஷிற்கு தமிழக வேளாண் துறையில், பட்டு ஆய்வாளர் பதவியும், அவரது சகோதரிக்கு ஜிப்மரில் செவிலியர் பணிக்கான நியமன ஆணைகளை வாட்ஸ் ஆப்பில் கார்த்திக் அனுப்பி வைத்தார்.
பணி ஆணையை பிரிண்ட் எடுத்து கொண்டு தமிழக வேளாண்துறைக்கு கணேஷ் சென்றார். அங்கு, போலி பணி ஆணை கொண்டு வந்துள்ளாக அவரை எச்சரித்து அனுப்பினர். இதுபோல் அவரது சகோதரியும் ஜிப்மர் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ், கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சேலம் ஆசாமி கார்த்திக் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.