/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மளிகை கடைக்காரர் மர்ம சாவு திருபுவனை போலீசார் விசாரணை மளிகை கடைக்காரர் மர்ம சாவு திருபுவனை போலீசார் விசாரணை
மளிகை கடைக்காரர் மர்ம சாவு திருபுவனை போலீசார் விசாரணை
மளிகை கடைக்காரர் மர்ம சாவு திருபுவனை போலீசார் விசாரணை
மளிகை கடைக்காரர் மர்ம சாவு திருபுவனை போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 05:39 AM

திருபுவனை: மளிகைக்கடைக்காரர் சொத்து தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் துரைசிங்கம் மகன் சிவகுமார், 40; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இரண்டு மகள்கள் உள்ளனர்.
சிவக்குமாருக்கும், அவரது உறவினரான சக்திவேல் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.
இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், சக்திவேல் தரப்பினர் சிவக்குமார், அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகள்களை தாக்கி, வீட்டை விட்டு விரட்டியதுடன், சிவக்குமாரின் மளிகை கடையை அடித்து சூறையாடினர்.
இது தொடர்பாக, சக்திவேல், அவரது மாமியார் முத்துலட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கலிதீர்த்தாள்குப்பம் கல்லாகுளம் பகுதியில் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கினார்.
அவரை உறவினர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து, சிவக்குமார் மனைவி மற்றும் உறவினர்கள், சக்திவேல் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருபுவனை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து, சிவக்குமார் மனைவி தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.