/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., நிர்வாகி 2ம் நாளாக போராட்டம் 6 ஆண்டிற்கு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம் பா.ஜ., நிர்வாகி 2ம் நாளாக போராட்டம் 6 ஆண்டிற்கு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
பா.ஜ., நிர்வாகி 2ம் நாளாக போராட்டம் 6 ஆண்டிற்கு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
பா.ஜ., நிர்வாகி 2ம் நாளாக போராட்டம் 6 ஆண்டிற்கு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
பா.ஜ., நிர்வாகி 2ம் நாளாக போராட்டம் 6 ஆண்டிற்கு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்
ADDED : ஜூன் 16, 2024 05:38 AM

புதுச்சேரி: பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கட்சியினருடன் 2வது நாளாக அரை நிர்வாண போராட்டம் நடத்திய, நிர்வாகி 6 ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி பதவியை ராஜினாமா செய்யக் கோரி அக்கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் அறிவித்தார்.
இந்நிலையில், ரத்தின வேலு நேற்று 2ம் நாளாக நிர்வாகிகள் 7 பேருடன் கட்சி அலுவலகத்தில் பாரத மாதா சிலை அருகே அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாநில தலைவர் செல்வ கணபதி அறிக்கை:
கட்சியில் மாநில செயலாளர் பொறுப்பு வகித்த ரத்தினவேலு, கட்சியின் நெறிமுறைகள் பின்பற்றாமல், கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் தற்காலிமாக கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டார்.
அதனை மீறி தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால், 6 ஆண் டிற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார் என, தெரிவிக்கப்பட் டுள்ளது.