/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை ஆறு காணாமல் போகும் அபாயம் கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை ஆறு காணாமல் போகும் அபாயம்
கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை ஆறு காணாமல் போகும் அபாயம்
கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை ஆறு காணாமல் போகும் அபாயம்
கொடி கட்டி பறக்கும் மணல் கொள்ளை ஆறு காணாமல் போகும் அபாயம்
ADDED : ஜூலை 28, 2024 07:10 AM

புதுச்சேரி வழியாக சங்கராபரணி, தென்பெண்ணை ஆகிய ஆறுகள் கடந்து செல்கின்றன. இதில் சங்கராபரணி ஆறு செல்லும் செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, சுத்துக்கேணி, செல்லிப்பட்டு, வில்லியனுார் பகுதிகளில் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள் போலீசில் வாய்மொழியாக புகார் தெரிவித்தால், மணல் கடத்தலை பிடிப்பது வருவாய்த் துறையின் வேலை என, தட்டிக் கழிக்கின்றனர். இதனால், மணல் மாபியாக்கள் சுதந்திரமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றின் கரையோர பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடும் இந்த கும்பல்கள், போலீசாரை மாதந்தோறும் கவனித்து கொள்வதால் மணல் கடத்தலுக்கு எந்தவித தடையும் இல்லை.
மேலும், ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால், பலரும் போட்டி போட்டுக் கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், புதிது புதிதாக மணல் திருடும் கோஷ்டிகள் உருவாகி வருகின்றன.
இதன் காரணமாக, ஒவ்வொரு பகுதியிலும் மணல் திருட்டில் இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் ஈடுபட்டுள்ளன. இந்த கும்பலுக்குள் கோஷ்டி மோதல்களும் ஏற்படுகிறது.
இந்த கோஷ்டி மோதல்கள் உச்சக்கட்டம் அடைந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மணல் வளம் கொள்ளை போவதால் ஆறுகள் தனித்தன்மையை இழக்கின்றன. எனவே, மணல் திருட்டை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.