ADDED : ஜூன் 06, 2024 02:32 AM
புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி ஏனாம் சென்றுள்ளார்.
புதுச்சேரி மாநில டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ் பிறந்தநாள் மணி விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.
ஏனாம் பிராந்தியத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் நேற்றிரவு ஏனாம் சென்றடைந்தனர்.