ADDED : ஜூன் 06, 2024 02:32 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்றிரவு திடீர் மழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மதிய வேளையில் அதிகரித்தும், மாலை நேரங்களில் கரும் மேகங்கள் சூழ்ந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய துவங்கியது. கிராமப் புறங்களில் திருக்கனுார், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
பல்வேறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மின்தடை ஏற்பட்டது.