/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழா துவங்கியது துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழா துவங்கியது
துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழா துவங்கியது
துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழா துவங்கியது
துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா 117ம் ஆண்டு பெருவிழா துவங்கியது
ADDED : ஜூன் 01, 2024 04:09 AM

புதுச்சேரி : புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையாட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது.
புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் கலிஸ்ட், மீரட் மறை மாவட்ட ஆயர் பாஸ்கர் ஏசுராஜ் ஆகியோர் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடி மரம் அருகே சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பின் ஆலய கொடிமரத்தில் கொடியேற்றப் பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
மாலையில் சிறப்பு மறையுரை, தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. நாளை 2ம் தேதி ஏசுவின் திருவுடல் திருரத்த பெருவிழா நடக்கிறது. மதியம் 12:00 மணியளவில் நடக்கும் திருப்பலியை உதகை ஆயர் அமல்ராஜ் நிறைவேற்கிறார்.
7ம் தேதி ஏசுவின் இருதய பெருவிழா கொண்டாடப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு திருப்பலியில், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் பங்கேற்கிறார்.
ஆடம்பர பெருவிழா 9ம் தேதி நடக்கிறது. காலை 7:30 மணி திருப்பலியில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், மாலை 5:30 மணி திருப்பலியில் துாத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை பிச்சைமுத்து, உதவி பங்கு தந்தை சின்னப்பன் செய்து வருகின்றனர்.