/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து சாவு அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து சாவு
அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து சாவு
அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து சாவு
அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து சாவு
ADDED : ஜூன் 01, 2024 04:09 AM
காரைக்கால் : காரைக்காலில் அடையாளம் தெரியாத நபர் ஆற்றில் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நிரவி மதகடி தோமாஸ் அருள் திடலை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் இரவு நேரத்தில் அரசலாற்றி துாண்டில் போட்டு மீன்பிடிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு ஆற்றில் மீன் பிடித்துகொண்டிருந்த போது 70 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆற்று தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தார்.
இது குறித்து வேல்முருகன் நகர காவல்நிலையத்தில் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.